தனது கணவரைத் தாக்க முயன்றதாக உதவி இயக்குனரை முற்றுகையிட்ட கவுன்சிலர் பேரூராட்சி நிர்வாகம் பணிகளில் பாரபட்சம்

x

திண்டுக்கல் அருகே பேரூராட்சிகளின் உதவி இயக்குநரை, பெண் கவுன்சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, இதில் பங்கேற்க வந்த பேரூராட்சி உதவி இயக்குநரை, கவுன்சிலர் ஹேமா தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். அப்போது அவர், தனது வார்டில் தனி நபருக்கு சாதகமாக வண்ணக்கல் பதிக்கும் பணி நடைபெற்றதாகவும், அதுகுறித்து கேட்டபோது பேரூராட்சி தலைவர் கூறி தான் செய்கிறோம் என கூறி, சிலர் தனது கணவரை தாக்க முயன்றதாகவும் கூறினார். மேலும், பேரூராட்சி நிர்வாகம் வார்டு பணிகளில் பாரபட்சம் காட்டி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்