தனியார் நிதி நிறுவன ரூ20 கோடி மோசடி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்.. சிக்கிய பெண் அதிகாரி
கேரளாவில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர், 20 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூரில் உள்ள தனியார் நிதி நிறுவன கிளையில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்த தன்யா மோகன் என்பவர், நிறுவன பணம் சுமார் 20 கோடி ரூபாயை மோசடி செய்ததாக, அந்நிறுவனம் சார்பில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து, கொல்லம் காவல் நிலையத்தில் சரணடைந்த தன்யாவிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு வங்கி கணக்குகளில் பணம் இருப்பு வைத்திருந்ததும், புதிய ஆடம்பர சொகுசு வீடு கட்டியதும் தெரிய வந்தது. இதனையடுத்து, வேறு யாருக்கேனும் மோசடியில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story