"அவர் சொன்னதால் தான் விஜய் கட்சி தொடங்கினாரா?" - சட்டென மாறிய புஸ்ஸி ஆனந்த் முகம்
சீமானுடன் கூட்டணியா என்பதை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் முடிவெடுப்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறி உள்ளார். உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் த.வெ.க சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு ஏழை மக்களுடன் இணைந்து உணவருந்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த, த.வெ.க-வில் அரசியல் சார்ந்த அனைத்து முடிவுகளையும் கலந்தாலோசித்து விஜய்தான் எடுப்பார் எனக் கூறினார்.
Next Story