வைகோ உடல்நிலை... துரை வைகோ வெளியிட்ட அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலன் குறித்து வதந்தி பரவிய நிலையில், அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் போனில் நலம் விசாரித்தாகவும் துறை வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். கால் தடுமாறி விழுந்ததில் தோள் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அப்பல்லோ மருத்துமனையில் சிறிய அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறுவை சிசிச்சை முடிந்து 3 நாள் கழித்து வைகோ வீடு திரும்புவார் என்றும் அதுவரை கழகத் தோழர்கள் நேரில் வந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என துறை வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story