கேரளாவில் ஓர் ஆச்சரியம் - வயலில் கிடைக்கும் ஐயப்பன் தரிசனம் - காண கோடி கண் வேண்டும்

x

கேரளாவில் ஓர் ஆச்சரியம் - வயலில் கிடைக்கும் ஐயப்பன் தரிசனம் - காண கோடி கண் வேண்டும்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் 18ம் படி வழியாக கோவிலுக்குள் கொண்டு சென்று பூஜை நடத்தப்படும் பின்னர் இந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் வழக்கம். இந்நிலையில் நிறைபுத்தரிசி பூஜைக்கு வழங்குவதற்காக பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள இடையாரன்முலா அருகே விவசாயி சுனில் என்பவர் தனது வயலில் ஐயப்பன் வடிவில் நெல் நடவு செய்துள்ளார். ஐந்து அரிய வகை நெல் விதைகளில் இருந்து ஐயப்ப வடிவத்தை உருவாக்கி இருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த டிரோன் காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்