காவு வாங்கிய சுவர்.. விளையாடும் போது பிரிந்த குழந்தையின் உயிர் | Ranipet | Thanthitv
கணியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர் மோகன்ராஜ் என்பவரது ஒன்றரை வயது மகள் கனிஷ்கா வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். வாசல்படிக்கட்டை ஒட்டி கட்டப்பட்டிருந்த குட்டிச்சுவரை பிடித்து குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சுவர் திடீரென சரிந்து விழுந்துள்ளது. அப்போது, சுவற்றின் மீது விழுந்த கனிஷ்காவிற்கு தலை, கை, காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கனிஷ்கா உயிரிழந்தார். தொடர் மழையால் சுவர் பலமின்றி சரிந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story