காவலரை சரமாரியாக தாக்கிய குற்றவாளியின் குடும்பம் - அடுத்த சில நொடிகளில் பறக்க விட்ட அதிரடிப்படை
காவலரை சரமாரியாக தாக்கிய குற்றவாளியின் குடும்பம் - அடுத்த சில நொடிகளில் பறக்க விட்ட அதிரடிப்படை
புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி காவல்துறையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் வசந்த், வழக்கு விசாரணைக்காக அம்மா நகரை சேர்ந்த சதீஷை அழைக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சதீஷ் விசாரணைக்கு வர மறுக்கவே, வலுக்கட்டாயமாக அவரை காவல் நிலையம் அழைத்து செல்ல வசந்த் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது இரு சகோதரர்களும், குக்கர் மூடி மற்றும் கற்களை கொண்டு வசந்த்தை தாக்கி தப்பியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த வசந்த்தை, சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஒருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஷை தேடி வருகின்றனர். இதனிடையே, காவலர் வசந்தின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்குமென அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.