"நான் சும்மா விடவே மாட்டேன்" - சீமானுக்கு சவால்..? அரசியல்வாதி vs போலீஸ் IPS

x

"நான் சும்மா விடவே மாட்டேன்" - சீமானுக்கு சவால்..? அரசியல்வாதி vs போலீஸ் IPS

திருச்சி எஸ்.பி., வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக சீமான், சாட்டை துரைமுருகன் உட்பட 22 பேர் மீது அண்மையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், X வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள திருச்சி எஸ்.பி. வருண்குமார், தனது குடும்பத்தார் பற்றி அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவேன் எனவும், சட்டப் போராட்டம் தொடரும் என பதிவிட்டுள்ளார். மேலும், அவதூறு பரப்ப தூண்டிவிட்ட நபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என குறிப்பிட்டுள்ள வருண்குமார், வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடி-க்களையும் விடப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்