75 வயது முதியவருக்கு வந்த அந்த ஆசை.. கடைசியில் நடந்த விபரீதம்

x

கொலை, கொள்ளை வழக்குகளில் சிறை சென்று திரும்பி, மாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய 76 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் நேரு நகரை சேர்ந்த பூபதி, குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பியபோது, வீட்டு பீரோவில் இருந்த 35 சவரன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்டம், நரசய்யாபுரம் பகுதியை சேர்ந்த 76 வயதான முகமது சித்திக் என்ற பொன்னுச்சாமியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பூபதியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து தங்க நகைகளை திருடிய பொன்னுசாமி, ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும், மாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக முதல் முறையாக இந்த திருட்டு சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், பொன்னுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்