பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வி - நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வி - நீதிமன்றம் போட்ட உத்தரவு

கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை மலை கிராமத்திற்கு போதிய போக்குவரத்து வசதி செய்து தர உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பூம்பாறையைச் சேர்ந்த கோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், பேருந்து வசதிகள் போதுமான அளவுக்கு இல்லாததால், பெரும்பாலான மாண்வர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் உள்ளதாக கூறயிருந்தார். அரசு தரப்பில் தினமும் நான்கு முறை அரசு பேருந்து இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்