6 நாட்களுக்கு பிறகு... வெளியான `குளு... குளு' செய்தி
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆறு நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர் மழை காரணமாக, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்து நீர்வரத்து சீரானதால், மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர் விடுமுறை காரணமாக கூட்டம் அதிகரித்த நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அருவியில் ஆனந்த குளியல் போட்டனர்.
Next Story