`தீ'-க்கு இரையான குழந்தைகள் - களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை

x

தீ'-க்கு இரையான குழந்தைகள் - களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை

மருத்துவமனைகளில் தீ தடுப்பு மற்றும் தீ பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது... அண்மையில் டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் பலர் உயிரிழந்தனர். இவை தவிர நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் அதீத வெப்பத்தின் காரணமாக பல்வேறு தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தலை சுகாதார அமைச்சகம் வழங்கி உள்ளது.

அபாயம் உள்ள பகுதிகளை அடையாளம் காண தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்