முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுக்கும் Gift என்ன தெரியுமா?

x

முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுக்கும் Gift என்ன தெரியுமா?

தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியை, 'தடம்' திட்டத்தின் மூலமாக கையில் எடுத்துள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின். தான் சந்தித்து வரும், அமெரிக்க முதலீட்டார்களுக்கு அதனை பரிசாகவும் வழங்கி வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் தயாரிக்கப்படும், பிரபலமான வாழை நார் கூடை, விழுப்புரத்தின் டெரகோட்டா சுடுமண் குதிரை சிற்பம் உள்ளிட்டவை அந்த பரிசு பெட்டகத்தில் அடங்கியுள்ளது. மேலும், நீலகிரி தோடா இன மக்களின் சித்திரத் தையல் சால்வை, பவானி ஜமுக்களாம் உள்ளிட்டவையும் பரிசு பெட்டகத்தில் உள்ளது. பழவேற்காட்டின் பனை ஸ்டாண்ட் மற்றும், கும்பகோணம் கைவினை கலைஞர்களின் தயாரிப்பான பித்தளை விளக்கு ஆகியவையும், பரிசு பெட்டகத்தில் இடம்பெற்றுள்ளன. கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த கையில் முதலமைச்சர் ஸ்டாலின் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை பரிசாக கொடுத்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்