தமிழகம் முழுவதும் வித்தியாசமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி...

x

விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் வித்தியாசமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாக்களை தொகுத்து வழங்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

வீர விநாயகா வெற்றி விநாயகா

முழுமுதற் கடவுளும் முக்கண்ணன் மகனுமான விநாயகர் அவதரித்த திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது...

அந்த வகையில், சேலம் செவ்வாய்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி வித்தியாசமாக கொண்டாடப்பட்டது...

இயற்கைப் பேரிடர்களால் உலகம் சிக்கி சின்னாபின்னமாகி வரும் இந்தக் காலகட்டத்தில்...பிரபஞ்சத்தின் அத்தனை கோள்களையும் சாந்தப்படுத்த வேண்டி...விநாயகர் தனது தாய் தந்தையான சிவன் பார்வதியுடன் சேர்ந்து பிரம்மாண்ட பூமிப் பந்தின் மீது நின்றபடி நடனமாடுவதைப் போல் வியக்க வைக்கும் வகையில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது...ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது...சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆனைமுகனுக்கு இஸ்லாமியர் ஒருவர் சாம்பிராணி போட்டு துவா செய்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது...


Next Story

மேலும் செய்திகள்