நண்பனை முழுசா நம்பிய நபர்.. மொத்தமாக விபூதி அடித்த சக தோழர்.. விசாரணையில் வெளியான உண்மை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பாவை சேர்ந்தவர் எழிலரசன். மினி வேன் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்த இவர், தன் நண்பனான நாச்சியார் குப்பத்தை சேர்ந்த சக்தி வேல் என்பவரது வீட்டிற்கு அருகே வேனை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்ட வேன், திருடு போனதாக கூறி எழிலரசனிடம் சக்திவேல் தெரிவித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வேனை சக்திவேலே விற்று விட்டு திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது. மேலும், அந்த வேன் மூவருக்கு அடுத்தடுத்து கைமாறி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில், வேனை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலையும், அவரிடம் இருந்து வேனை வாங்கிய மூவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
Next Story