விரைவில்.. 22 மீனவர்கள் விடுதலை - எம்பி கனிமொழி உறுதி

x

தூத்துக்குடி கடல் பகுதியிலிருந்து, 60 நாட்டிகல் மைல் தொலைவில், 22 மீனவர்கள் கடந்த 21 மற்றும் 23ம் தேதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 22 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேசியுள்ளதாகவும், விரைவில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்