தொட்ட மறுநொடி பிரிந்த உயிர்.. எமனாய் மாறிய கம்பி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்நிலையில் காசிநாதன் என்ற கூலித்தொழிலாளி, மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அதில் காலை வைத்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்த போலீசார், காசிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story