குளம் போன்று காட்சியளிக்கும் சாலைகள் - களத்தில் இறங்கி அதிரடி உத்தரவிட்ட கலெக்டர்
வேலூர் காட்பாடி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரை கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்தார். காட்பாடியில் கனமழை கொட்டியதால் முத்தமிழ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது. குறிப்பாக சித்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து விஐடி செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவலறிந்து வந்த கலெக்டர் சுப்புலட்சுமி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story