திடீரென வெடித்த சென்னை சாலை - முகம் சுளிக்க வைத்த காட்சி

x

திடீரென வெடித்த சென்னை சாலை - முகம் சுளிக்க வைத்த காட்சி

சென்னை மந்தைவெளியில் சாலையில் இருந்து திடீரென கசியும் சகதியால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். ஆர்.கே மட் சாலை பகுதியில் உள்ள ராபர்ட்சன் லேனில், திடீரென சாலை வெடித்து சகதி வெளியேறியதால், அப்பகுதி மக்கள் மக்கள் மாநகராட்சிக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சரி செய்து வருகின்றனர். மெட்ரோ பணிகள் காரணமாக திடீரென வெடிப்பு ஏற்பட்டு சகதி வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்