ஒரு கையில் கேன் மறுகையில் பிள்ளைகள் - நெடுஞ்சாலையில் களமிறங்கிய பெண் - விசாரணையில் பகீர்

x

குலாலிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. அதே பகுதியில் கூலி வேலை செய்து வரும் இவர், திமுக ஒன்றிய செயலாளர் வைரமணி என்பவர் நடத்தி வரும் மகளிர் குழுவில் உறுப்பினராக இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்குழுவில் இருந்து பிரியா விலகிய நிலையில், இவரது ஆவணங்களை பயன்படுத்தி இரண்டு வங்கிகளில் இருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுள்ளார் வைரமணி. இந்நிலையில், வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்துமாறு பிரியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து வைரமணியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைரமணி முறையாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த பிரியா, குழந்தைகளுடன் வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்ததன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்