"நீதான்பா எங்கள காப்பாத்தணும்" - காலில் விழுந்து கதறும் பெண்கள்... கண் கலங்க வைக்கும் காட்சி

x

பெரும்பாக்கம் பொழினியில் சாரங்கன் என்பவர், மூன்று தலைமுறையாக சுமார் 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும், இந்த இடத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் சாரங்கனுக்கு நோட்டீஸ் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி, பெரும்பாக்கம் போலீசார், நிலத்தின் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றி விவசாய நிலத்திற்கு செல்லும் வழியை இரும்பு தகடுகள் வைத்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி உள்ளிட்ட பெண்கள், ஆணைய இயக்குனரின் காலில் விழுந்து கதறி அழுதனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்