ஒற்றை மெயிலால் - பதறிய உத்தரபிரதேசம் - நடுங்கிய பெற்றோர்

x

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... டெல்லி உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில், தற்போது கான்பூரில் 10 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. ரஷ்யாவை தளமாகக் கொண்ட சர்வர்கள் மூலம் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து வரும் நிலையில் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்