ஜன்னல் வழியில் ரயிலில் ஏறும் வடமாநில தொழிலாளர்கள்.. வெளியான பரபரப்பு காட்சி
சொந்த ஊருக்கு செல்வதற்காக திருப்பூர் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், ரயிலில் ஜன்னல் வழியாக ஏறி வடமாநில தொழிலாளர்கள் இடம்பிடித்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் ஒரு வார காலத்திற்கு விடுமுறை அளித்துள்ளதால் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், அனைத்து ரயில்களிலும் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஜன்னல் வழியாக ரயிலில் ஏறி இடம் பிடித்தனர்.
Next Story