திருப்பத்தூரை கதிகலங்க செய்த தொழிலதிபரின் Kidnap... விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

x

ஜோலார்பேட்டை அடுத்த இடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தியராகராஜ், எலவம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அழைத்துச் சென்று, ஒரு கோடி ரூபாய் கேட்டு சரமாரியாக தாக்கியது. இறுதியில் 12 லட்சம் பணத்தை கொடுப்பதாக தியாகராஜின் மைத்துனர் அரவிந்த் ஒப்புக் கொண்டதை அடுத்து, கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்துவிட்டு அரவிந்த் அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின், தியாகராஜை தர்மபுரி மேம்பாலம் கீழே கடத்தல் கும்பல் விட்டுச் சென்றது. இதுகுறித்து தியாகராஜின் தந்தை யுவராஜ், கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தியாகராஜனின் மைத்துனர் அரவிந்த் என்பது தெரிய வந்ததால், அவரை போலீசார் கைது செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்