தன் கத்தியால் தனக்கு வந்த வினை...ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்...தேனி அருகே அதிர்ச்சி சம்பவம்
பெரியகுளம் அடுத்த வடகரை அழகர்சாமி புரத்தை சேந்தவர் கண்ணதாசன். ரவுடியான இவர், அதே பகுதியை சேர்ந்த கரண்குமார் என்பவரிடம் பணப்பறிப்பில் ஈடுபட முயன்ற நிலையில், கரண்குமார் போலீசில் புகாரளித்தார். இதனால், ஆத்திரத்தில் இருந்த கண்ணதாசன், சம்பவத்தன்று இரவு கரண்குமாரை கத்தியால் தாக்க வந்த நிலையில், இதனை கண்டு கரண்குமாரின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், கண்ணதாசனை சுற்றி வளைத்த அவர்கள், கண்ணதாசன் வைத்திருந்த கத்தியாலையே அவரை குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், கரண் குமார், அவரின் சகோதரர் புகழேந்தி உட்பட ஐவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story