திடீரென கூடிய எண்ணிக்கை - அமைச்சர் நிகழ்ச்சியில் திணறிய மாற்றுத்திறனாளிகள்
தென்காசியில், அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரைகுறையாக போடப்பட்ட பந்தலால் மாற்றுத் திறனாளிகள் அவதியடைந்தனர். அங்குள்ள இசிஈ அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்காக சிறிய அளவில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நிகழ்ச்சியின் இடையே கூடுதலாக பந்தல் போடப்பட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர்.
Next Story