தாயை தவறாக பேசிய இளைஞர் - சரமாரியாக விழுந்த கத்திக்குத்து - தென்காசியில் நடந்த அதிர்ச்சி
தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரை சேர்ந்தவர் கண்ணன். 25 வயதான இவர், தன் உறவினரான அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள் என்பவரிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த செல்லம்மாளின் மகன் முருகன், இளைஞரை கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், படுகாயமடைந்த கண்ணன் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story