9 மாதங்களுக்கு பின் சீல்உடைக்கப்பட்ட திரெளபதி அம்மன் கோயில் - திரெளபதி அம்மன் கோயில்

x

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, திரெளபதி அம்மன் கோயில். இந்த கோயிலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தீமிதி திருவிழாவின்போது, இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக நிலை ஏற்படவில்லை. இதனையடுத்து, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க, கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்கில், கோயிலை உடனே திறந்து, தினமும் ஒரு கால பூஜை செய்யவேண்டும் என்றும், இருதரப்பிலும் இல்லாத ஒருவரை பூசாரியாக நியமிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சகஜ நிலை திரும்பும் வரை பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கோயிலின் சீல், இன்று அகற்றப்பட்டு, சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்