"No:1 ஆக திகழும் தமிழகம்" - உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
No:1 ஆக திகழும் தமிழகம்" - உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கல்வி, தொழில், மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சியைச் சீர்குலைக்க வேண்டும் என மக்களுக்கு சாதி, மத வெறியூட்டி அரசியல் ஆதாயம் தேட பாசிச சக்திகள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இன்னொருபுறம்,
திராவிட மாடல் ஆட்சியின் மீது, அவதூறுகளை பரப்பி, தி.மு.கவை வீழ்த்த முடியும் என்று நினைப்போரும் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், நமக்கு 2026 சட்டமன்ற தேர்தல் களம் காத்திருப்பதாகவும், அதில் வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்மூலம் தமிழ்நாடு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என கூறியுள்ள அவர்,
சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை, மீண்டும் 2026-இல் அமைக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.