தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை

x

இக்குழுவில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன், உலக சுகாதார நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இயக்குனர் கல்பனா பாலகிருஷ்ணன், யுனிசெஃபின் அனன்யா கோஷல், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் உள்ளிட்ட 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவானது, விலங்கியல் நோய்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது மற்றும் மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.


Next Story

மேலும் செய்திகள்