பட்டாசு வெடிப்பதில் வெடித்த தகராறு... 17 வயது சிறுவனுக்கு நடந்த பயங்கரம்
பட்டாசு வெடிப்பதில் வெடித்த தகராறு... 17 வயது சிறுவனுக்கு நடந்த பயங்கரம்
சென்னை ராயப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த 17 வயதான ஷாம் என்பவர், தீபாவளியை கொண்டாட தனது நண்பர்களுடன் ஐஸ் ஹவுசில் உள்ள செல்லம்மாள் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஷாம் தாக்கப்பட்டு தடுமாறி கீழே விழுந்துள்ளார். சிறு காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த ஷாமை, அவரது நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து ஐஸ் ஹவுஸ் போலீசார், சிறுவனை தாக்கி விட்டு தப்பியதாக கூறப்படும் கார்த்திக் என்ற முதலை கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். தலைமறைவான முதலை கார்த்திக் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.