"சென்னையில் அதி பயங்கர தீவிரவாத கூட்டத்தின் தலைவன்..?" NIA விசாரணையில் வெளியான திடுக் தகவல்
"சென்னையில் அதி பயங்கர தீவிரவாத கூட்டத்தின் தலைவன்..?" NIA விசாரணையில் வெளியான திடுக் தகவல்
சென்னையில் ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பாக மே மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரித்த போது கிடைத்த தகவலின்படி ஃபைசுல் ரஹ்மான் என்பவரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்தது. விசாரணையில் ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்பின் தமிழக தலைவராக ஃபைசுல் ரஹ்மான் செயல்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவம், அங்கிருக்கும் பயங்கரவாத அமைப்புகளோடு அவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. தொடர்ச்சியாக தரமணி எத்திராஜ் சாலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மன்சூர் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 2 வங்கி அதிகாரிகளோடு சோதனையை தொடங்கினர். பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதா? வேறு ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்பது குறித்து சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.