திருடனாக மாறிய காவலர் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் - வெளியானது அதிர வைக்கும் காட்சி

x

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பக்தவச்சலபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதா. இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், அங்கு டீ சர்ட், ஜெர்க்கின் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசுவது போல நடித்து, ராதாவின் 15 சவரன் தங்கச் சங்கிலியை திருடிச் செல்ல முயன்றார். ராதா சங்கிலியை இருக்கி பிடித்துக் கொண்ட நிலையில், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவில் தலைமை காவலராக டெல்லியில் 8 வது பட்டாலியனில் பணிபுரியும் காவலர் பொக்கார் நாயக்கர் என தெரியவந்தது. மேலும், ,கடந்த 04 ஆம் தேதி முதல் 15 நாட்கள் அலுவல் விடுப்பில் சென்னைக்கு தபால் கொடுக்க வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து ஷாக் கொடுக்கும் கருவி, காவலர் அடையாள அட்டை, தங்க நகைகளை கைப்பற்றியதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்