வயலுக்கு சென்ற பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... அலறி அடித்து ஓடிய குழந்தைகள்

x

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ரெட்டாக்குறி கிராமத்தை சேர்ந்தவர் சவரி முத்து. இந்த நிலையில், சவரி முத்து தனது மனைவியுடன், அருகில் உள்ள வயலுக்கு சென்றிருந்தார். வீட்டின் அருகே, இவர்களது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர், அப்போது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. பயந்து போன குழந்தைகள் கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர். உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தரப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படாமல் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்