சொத்து பிரச்சனையால் நடந்த சம்பவம்.. பெரியப்பாவுக்கு விழுந்த அரிவாள் வெட்டு | Thanthitv

x

கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் உத்திராடம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு, தன் தம்பியுடன் சொத்துப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பும் போலீசில் புகாரளித்திருந்த நிலையில், இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போலீசார், கடிதம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டருகே சென்று கொண்டிருந்த உத்திராடத்தை அவரின் தம்பி மகன் சுபாஷ், பின் தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உத்திராடத்தின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரின் தம்பி மகனான 21 வயது இளைஞர் சுபாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்