`ரூ.22 கோடி மதிப்புள்ள சிலைகள்' கடத்தல் கும்பலுக்கு செக் வைத்த போலீசார்
`ரூ.22 கோடி மதிப்புள்ள சிலைகள்' கடத்தல் கும்பலுக்கு செக் வைத்த போலீசார்
தமிழக கோவில்களில் உள்ள சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 13 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
திருச்சியைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர், தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு காரின் பின்பகுதியில் ஐம்பொன் சிலைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த காரில் வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், லட்சுமணன் ஆகிய இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, லட்சுமணன் தனது நிலத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது இந்த சிலைகள் கிடைத்ததாக கூறினார். அந்த சிலைகளை ராஜேஷ் கண்ணன் மூலமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு சென்னைக்கு கொண்டு சென்றபோது பிடிபட்டதாகவும் அவர் கூறினார். அந்த சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், லட்சுமணன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.