"அட.. இது நல்லா இருக்கே.."- பாம்பிற்கு கற்பூரம் காட்டி வழிபட்டு - மீண்டும் திறக்கப்பட்ட பாம்பு பண்ணை

x

தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் செயல்பட்டு வரும் பாம்பு பண்ணைக்கு பழங்குடி இருளர்கள் கிட்டத்தட்ட 350 பேர் வயல்வெளிகள், புதர்களில் தேடி சென்று பாம்புகளை பிடித்து வந்து கொடுப்பர். வருடந்தோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் பாம்புகள் இனப்பெருக்க காலம் என்பதால் கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு வடநெம்மெலி பாம்பு பண்ணை மூடப்பட்டது. இனப்பெருக்க காலம் முடிவடைந்ததை ஒட்டி பாம்பு பண்ணை மீண்டும் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக பழங்குடி இருளர்கள் பிடித்து வந்த நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டைவிரியன் உள்ளிட்ட 50 விஷ பாம்புகள் பானைகளில் அடைத்து வைக்கப்பட்டன. பாம்பு பண்ணை திறக்கப்பட்டதும் பார்வையாளர்கள் வருகை தந்தனர். அப்போது, தங்கள் வாழ்வாதாரம் காத்து, தங்கள் வாழ்வாதாரம் காக்கும் பாம்புகளுக்கு நன்றி கூறும் மிவிதமாக, படம் எடுத்து ஆடிய நல்ல பாம்புக்கு, பாம்புகளை பராமரிக்கும் பணியாளர்களான பழங்குடி இருளர்கள் பயபக்தியுடன் பொட்டு வைத்து கற்பூர ஆராதனை காட்டி பூஜை செய்து வணங்கினர். பிறகு கையடக்க பாதுகாப்பு கருவி உதவியுடன் நல்ல பாம்பினை தூக்கி காட்டி பார்வையாளர்களுக்கு காட்சி படுத்தி தங்கள் பணியை தொடங்கினர். பிறகு பார்வையாளர்கள் முன்பு பாம்புகளில் இருந்து விஷம் எடுக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்