வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைபணியாளர்கள்-கோவையில் பரபரப்பு
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைபணியாளர்கள்-கோவையில் பரபரப்பு
போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி, வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும், தனியார் நிறுவனம் தன்னிச்சையாக நிர்ணயித்த போனஸ் தொகையை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தை மூலம் போனஸ் தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அதோடு வார விடுமுறை , இஎஸ்ஐ , கூடுதல் பணிக்கு கூடுதல் சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Next Story