கடலுக்கு அடியில் ஐஐடி குழு அதிரடி சோதனை
தமிழ்நாடு - இலங்கை இடையே மீண்டும் படகு சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி நாகை - இலங்கை காங்கேசந்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில், இராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான படகு சேவையை தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளுக்காக, அக்னி தீர்த்தக் கடல்பகுதியில் ஐஐடி நிபுணர்கள் குழு கடலுக்கு அடியிலும், கரையிலும் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக ராமேஸ்வரத்தில் இதற்கான கட்டுமானங்கள் ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Next Story