``பஸ்-ல போக இனி குடை வேணுமோ..'' பேருந்துக்குள் கொட்டிய மழைநீர் | TN Rain
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. உலுப்பகுடி, கோபால்பட்டி, சாணார்பட்டி, கணவாய் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்திற்குள் மழைநீர் ஆங்காங்கே அருவிபோல் கொட்டியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்..
Next Story