வெடிக்கு பதிலாக வெளுத்த்து வாங்கிய மழை... வீட்டிற்குள் முடங்கிய மக்கள்
வெடிக்கு பதிலாக வெளுத்த்து வாங்கிய மழை... வீட்டிற்குள் முடங்கிய மக்கள்
வடகிழக்கு பருவமழையை ஒட்டி, 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடக்கப்பட்டிருந்த நிலையில், சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், அதன் சுற்றுவட்டார பகுதிகளான சின்னகடை தெரு, வெங்கலாபுரம், லண்டன் மெஷின் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது. தீபாவளியன்று கனமழை பெய்ததின் காரணமாக, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாப்பாரப்பட்டி, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக பட்டாசு விற்பனை பாதித்துள்ளதாக, விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த திடீர் மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை பெய்துள்ள நிலையில், மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.