இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா? - பிரியங்கா சொன்ன பதில்
அமேதி, ரேபரேலியில் காங்கிரசுக்காக தீவிரமாக பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்து பேசினார். அப்போது, இந்தியா கூட்டணியின் பிரதமராக ராகுலை முன்நிறுத்தினால் மகிழ்ச்சி அடைவீர்களா...? என செய்தியாளர் கேள்வியை எழுப்பினார். அதற்கு ஒரு சகோதரியாக எனது சகோதரர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனவும் திருமணம் செய்துக்கொண்டு, குழந்தைகளை பெற்றுக் கொண்டு தந்தையாக வாழ வேண்டும் எனவும் கூறினார். இந்தியா கூட்டணியின் பிரதமர் குறித்து கூட்டணி கட்சிகள் முடிவு எடுக்கும் என்றார். 53 வயதாகும் ராகுல் காந்தி திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என தலைவர்களும், காங்கிரசாரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சமீபத்தில் ரேபரேலி கூட்டத்தில் வாக்காளர்கள் எப்போது திருமணம் என கேட்ட போது பிரியங்கா ராகுலை பதிலளிக்க கூறியிருந்தார். அப்போது... விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ராகுல் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.