"பெண்களை மாவட்டத்தைவிட்டு மாவட்டத்திற்கு மாற்றுவது நியாயமா?" பிரேமலதா ஆவேசம்
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள 5 ஆயிரத்து 493 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கக்கோரி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
Next Story