விறு விறுவென தபால் ஓட்டு போட்ட காவலர்கள் ! - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
நாடாளுமன்ற தேர்தலுக்கான காவல்துறையினரின் தபால் வாக்குப்பதிவானது சென்னையில் நடைபெற்று வருகிறது. அமைந்தகரை செனாய் நகரில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் காவல்துறையினர் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி,வில்லிவாக்கம், புரசைவாக்கம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் வாக்கு செலுத்த வேண்டிய காவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சென்னையில் சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தபால் வாக்கு செலுத்த வேண்டி விண்ணப்பித்திருந்ததாகவும், அதில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story