வாயை பிளக்க வைத்த "டீசல் பரோட்டா" - புயலை கிளப்பிய வீடியோ..

x

சண்டிகரில் பரோட்டாக்கள் எண்ணெய்க்கு பதில் டீசலில் செய்யப்படுவதாக வெளியான வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் இந்த டீசல் பரோட்டாக்களை தினமும் 300 பேர் வாங்கிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது... இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பரோட்டா சாதாரண எண்ணெயில் செய்யப்பட்டது என்றும் டீசலில் செய்யப்படவில்லை எனவும் உணவக உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட சமூக வலைதள பிரபலம் இருவரும் விளக்கமளித்துள்ளனர்... கன்டென்ட்டிற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்ட நிலையில், தங்கள் நடவடிக்கைக்கு மன்னிப்பும் கோரியுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்