மக்களை அச்சுறுத்தும் உயிரினம் - போராட்டத்தில் குதித்த மக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில், யானை நடமாட்டத்தை தடுக்காத, வனத்துறையினரை கண்டித்து உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தேவர் சோலை, நெலாக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களிலும், ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலும் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தாத வனத்துறையினரை கண்டித்து, பல்வேறு கிராமங்களில், 24 மணிநேர உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. யானைகளை விரட்ட, வனத்துறையினர் தற்காலிக நடவடிக்கைகளை மட்டுமே எடுப்பதாகவும், இதற்கு நிரந்த தீர்வு காண்பதில்லை என்றும், போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story