செல்போன் எண்களை விற்பனை செய்த விவகாரம் - DTE வெளியிட்ட பரபரப்பு தகவல்

x

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் மாணாக்கர்களின் தொலைபேசி எண்ணோ, மாவட்ட விபரமோ எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

தரவரிசை தகவல்களை சில சமூக விஷமிகள் தங்களது சுயநலத்திற்காக வேண்டி, தவறான தொலைபேசி எண் மற்றும் தவறான மாவட்ட விவரங்களைக் கொண்டு மாற்றி அமைத்து வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமான தரவு தளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன் 88 புள்ளி மூன்று நான்கு சதவீதம் பொருந்தவில்லை என்றும்,

இதுதொடர்பாக சைபர் கிரைம் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ தகவல் சேமிப்பு கட்டமைப்பு firewall, secure socket layer certificate மற்றும் virtual private connection ஆகிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தகவல்கள் சிறிதளவும் கசியாவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும், 1800-425-0110 என்ற தொலைபேசி எண் வாயிலாக சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்