4 மணி நேரத்திற்குள் - நாற்பது திருமணம் - ஸ்தம்பித்து போன ஓ.எம்.ஆர் சாலை
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோவிலில், சுப முகூர்த்த நாளையொட்டி, ஏராளமான சுப நிகழ்ச்சிகள் அரங்கேறியதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. வைகாசியின் முதல் சுபமுகூர்த்த நாள் என்பதால், காலை 6 மணி முதல் 10 மணி வரை திருப்போரூர் முருகன் கோவிலில், 40க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதே போன்று குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்வு, வேண்டுதல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் அரங்கேறியதால் கோவில் உள் மண்டபம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பின. இதன் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story