"சார் நீங்க பொய் சொல்லாதீங்க" திடீர் என்ட்ரி கொடுத்த தனி ஒருவர் - பரபரப்பான நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்' எனும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவில்பட்டி கிராமத்தில் 10 கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது முத்துச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் ஒருவர், குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பித்து 6 மாதங்களாக தன்னை அலைக்கழிப்பதாக சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story