பிரபல கோயில் மூடப்பட்ட விவகாரம் - நீதிபதி அதிரடி உத்தரவு

x

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பழமைவாய்ந்த முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு தீண்டாமை சுவர் பிரச்சினை எழுந்ததால், கோயில் பூட்டப்பட்டது. இந்நிலையில், கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு எதிராக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் திறக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பும், கோயில் திறக்கப்படவில்லை. திறந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், காவல்துறை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என குறிப்பிட்டதோடு, வழக்கில் பிற சமுதாயத்தினரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்